search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாமில் குடிமக்கள் பதிவு பட்டியல் வெளியீடு"

    அசாம் மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவு இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். #AssamNRC #NRCReleased
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்திற்குள் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர். பல ஆண்டுகளாக இப்பிரச்சினை உள்ளது. எனவே, உண்மையான குடிமக்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் ‘தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் பராமரிக்கப்படுகிறது. அவ்வகையில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின்கீழ், தற்போது தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

    மாநில மக்கள் தங்களை இந்த பட்டியலில் சேர்க்கும்படி விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தற்போது குடிமக்கள் தேசிய பதிவு இறுதி வரைவு பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் அசாமின் சட்டப்பூர்வமான குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இறுதி வரைவு அறிக்கை குறித்து பேசிய அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால், இது ஒரு வரலாற்று தருணம் என்றும்,    வன்முறைகளைத் தூண்டக்கூடிய எந்தவொரு வதந்திகளையும் நம்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

    குடிமக்கள் தேசிய பதிவு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ள 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



    இந்த பட்டியலில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #AssamNRC #NRCReleased

    ×